உலகம்

காசா மீது குண்டு வீசுவதை நிறுத்து! லண்டனில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்

Published

on

காசா மீது குண்டு வீசுவதை நிறுத்து! லண்டனில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்

பிரித்தானியாவின் லண்டன் நகரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போர் நிறுத்த கோஷங்களை எழுப்பினர்.

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி, தரைவழித் தாக்குதல்களில் இதுவரை 4,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 11,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மீது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் உள்ள பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் பலர் பேரணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக லண்டனில் லட்சக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டு, ”காசா மீது குண்டு வீசுவதை நிறுத்து” மற்றும் ”இப்போதே போர் நிறுத்தம் வேண்டும்” என்றும் கோஷமிட்டனர்.

இந்த அணிவகுப்பில் சுமார் 3,00,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைந்ததாக பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். இது முதலாம் உலகப்போரின் முடிவைக் குறிக்கும் மற்றும் இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களைக் கௌரவிக்கும் வருடாந்திர போர்நிறுத்த நாள் நினைவேந்தலின் அதே நாளில் வந்தது.

இதில் பிரித்தானிய முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கார்பின் மற்றும் இஸ்லிங்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தப் பேரணியில் பங்கேற்று போர் நிறுத்தத்தைக் கோரினர்.

Exit mobile version