உலகம்

மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: காசா நிலைமை குறித்து WHO தலைவர் வேதனை

Published

on

மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: காசா நிலைமை குறித்து WHO தலைவர் வேதனை

இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காசாவில் நடைபெறும் அவலம் வேதனை தருவதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவத்திற்கும், ஹமாஸ் படை வீரர்களுக்கும் இடையே கடுமையான சண்டை பாலஸ்தீனத்தின் காசாவில் நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் படையினர் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்து இஸ்ரேலிய ராணுவம் காசாவில் உள்ள மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் உட்பட 11, 000 பேர் காசாவில் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் போரினால் காசாவில் ஏற்பட்டுள்ள அவலநிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தனது வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், போரினால் காயமடைந்தவர்களுக்கு காசாவில் மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
மேலும் போரில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது. தரவுகளின் அடிப்படையில் போரில் உயிரிழந்தவர்களில் 70% பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது கூடுதல் வேதனை அளிக்கிறது என WHO தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
Exit mobile version