உலகம்
வலையில் சிக்கிய தங்க மீன்
வலையில் சிக்கிய தங்க மீன்
பாகிஸ்தானைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் அரிய வகை மீன்களை பிடித்து விற்றதில் ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார்.
கராச்சியின் Ibrahim Hyderi மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஹாஜி பலோச் என்பவரே நண்பர்களுடன் அரபிக்கடலில் கடற் தொழிலுக்கு சென்றுள்ளார்.
அவரது வலையில் தங்க மீன்கள் என அழைக்கப்படும் ”சோவா” என்ற அரிய வகை மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
20 முதல் 40 கிலோ எடை கொண்ட சோவா மீன் 1.5 மீற்றர் நீளம் வரை வளரக்கூடியது எனவும் கிழக்கு நாடுகளில் அதிகம் விரும்பப்படும் இந்த வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் விலைமதிப்பற்றதாகவும், அரிதாகவும் காணப்படும் குறித்த மீனின் வயிற்றிலுள்ள பொருட்கள் பல நோய்களை குணப்படுத்தும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடற்றொழிலாளர் ஹாஜி அரிய வகை மீன்களை கராச்சி துறைமுகத்தில் ஏலத்தில் விட்ட போது அவருக்கு 7 கோடி ரூபாய் கிடைத்ததுள்ளது.
குறிப்பாக அதில் ஒரு மீன் மட்டுமே ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போனதால் சாதாரணகடற்றொழிலாளராக இருந்த ஹாஜி ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.