உலகம்
அமெரிக்க ஜனாதிபதி போட்டியிலிருக்கும் இந்திய வம்சாவளியினர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து: கனேடியர்கள் கோபம்
அமெரிக்க ஜனாதிபதி போட்டியிலிருக்கும் இந்திய வம்சாவளியினர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து: கனேடியர்கள் கோபம்
அமெரிக்க ஜனாதிபதி போட்டியிலிருக்கும் இந்திய வம்சாவளியினர் ஒருவர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள், கனேடியர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
அவருடைய பெயர், விவேக் கணபதி ராமசாமி (38). விவேக் ராமசாமி என அழைக்கப்படும் அவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார், அவர் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன.
அமெரிக்கக் குடிமகனான விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவைச் சேர்ந்த தமிழ் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
பாலக்காடு என்னுமிடத்திலிருந்து புலம்பெயர்ந்த கணபதி, கீதா ராமசாமியின் மகனான விவேக் ராமசாமியின் மனைவி அபூர்வா, ஒரு மருத்துவர். தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
எதிரெதிர் அணியிலிருந்தாலும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஆதரவு தெரிவிப்பவர் விவேக் ராமசாமி.
தற்போது விவேக் ராமசாமி தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய ஒரு கருத்து கனேடியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலை நாடுகளில் புலம்பெயர்தலுக்கெதிராக கருத்துத் தெரிவிப்பவர்களில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
பிரித்தானியாவில், பிரீத்தி பட்டேல், ரிஷி சுனக், சுவெல்லா பிரேவர்மேன் என அந்த வரிசையில், இந்திய வம்சாவளியினரான விவேக் ராமசாமியும் இணைந்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான விவாத மேடை ஒன்றில் பேசிய விவேக் ராமசாமி, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான எல்லையில் தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டியெழுப்பவேண்டும் என்று கூறியுள்ளார்.
போதை மருந்துகள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக அவர் இந்த யோசனையைத் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த யோசனை, கனேடியர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவிலும் அவரது கருத்துக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விடயம் என்னவென்றால், அமெரிக்கா கனடாவுக்கிடையிலான எல்லை, 8,900 கிலோமீற்றர் நீளமுடையது. உலகிலேயே மிக நீளமான எல்லைப்பகுதி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.