உலகம்

ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு : மலேசிய பிரதமர்

Published

on

ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு : மலேசிய பிரதமர்

மலேசிய மக்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டுமெனவும் ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்று கொள்ள போவதில்லையென மலேசிய பிரதமர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை மலேசிய நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போதே கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இனவெறியை எதிர்த்து ஆப்பிரிக்க மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை போல் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மக்களுக்காக போராடி வருகின்றனர்.

அமெரிக்கா எனும் தனிநாடு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கோ, அச்சுறுத்தலுக்கோ நான் அஞ்ச போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் முடிவுகளைத்தான் நாங்கள் அங்கீகரிப்போம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காசாவின் மீதான் இஸ்ரேல் தாக்குதலை “காட்டுமிராண்டித்தனம்” என அன்வர் சில தினங்களுக்கு முன் பேசியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Exit mobile version