உலகம்

காசா நகரின் மைய பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம்

Published

on

காசா நகரின் மைய பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் 33ஆவது நாளாகவும் தொடரும் நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் ஹமாஸ் அமைப்பினரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினரின் பரந்த சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து தாக்க தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

தரைவழியாகவும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், தனது படைகள் காசா நகரின் மையப்பகுதியை அடைந்து ஹமாஸ் அமைப்பினரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேலின் தரைப்படைகள் ஹமாஸ் அமைப்பினர் ஏற்படுத்தி வைத்திருக்கும் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தற்போது தாக்க தொங்கியுள்ளதாகவும், சுமார் நூறு கிலோமீற்றர் வரை நீண்டு செல்லும் சுரங்கப்பாதைகளை தகர்ப்பதற்காக இஸ்ரேஸ் இராணுவ பொறியாளர்கள் வெடிமருந்துக்களை பயன்படுத்தி வருவதாகவும் உயர் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version