உலகம்

பெண்களை பணய கைதிகளாக வைத்து கைது செய்யும் இஸ்ரேல்..!

Published

on

பெண்களை பணய கைதிகளாக வைத்து கைது செய்யும் இஸ்ரேல்..!

காசாவில் 33ஆவது நாளாகப் போர் தொடர்ந்து வருகின்ற நிலையில் பெண்களையும் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்து பாலஸ்தீனர்களைச் சரணடைய இராணுவம் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்குக் கரையில் நேற்று(07.10.2023) கைது நடவடிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதோடு, ஹெப்ரானில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் உள்பட பலரை இராணுவம் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள மேற்குக் கரை பகுதியில் காசா மட்டுமல்லாது ஹமாஸ் ஆதரவாளர்கள் எனக் கருத்தப்படுகிறவர்கள் மீது தாக்குதலும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன.

குறித்த பகுதிகளில் கள நிலவரம் அளிப்பதற்கு பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பாலஸ்தீன பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு ஐநாவிற்கு அளித்த அறிக்கையில் இதுவரை 30 பத்திரிக்கையாளர்கள் போர் ஆரம்பித்தது முதல் பலியாகியுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version