உலகம்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் புடின்

Published

on

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் புடின்

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில் மீண்டும் போட்டியிட தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளும் சுதந்திர கட்சியை சேர்ந்த விளாடிமிர்புடின் ரஷ்யாவின் 71ஆவது ஜனாதிபதியாக உள்ளதோடு கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பரில் ஜனாதிபதியாக இருந்த போரிஸ் யெல்ட்சின் பதவி விலகவே தற்காலிக ஜனாதிபதியாக விளாடிமிர்புடின் பதவி ஏற்றார்.

விளாடிமிர் புடின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து 2000ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ரஷ்ய ஜனாதிபதியானார்.அப்போது நான்கு ஆண்டுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைமுறை விதியை ஆறு ஆண்டுக்கு ஒரு முறை என மாற்றியிருந்தார்.

தொடர்ந்து 2012, 2018ம் ஆண்டுகளில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் புடினே வெற்றிபெற்ற நிலையில் தேர்தலில் பல்வேறு முறைகேடு செய்து தான் புடின் வெற்றி பெற்றார் என ரஷ்ய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

இந்நிலையில் புடினின் ஜனாதிபதி பதவிகாலம் நிறைவடைகிறது. இதையடுத்து 2024 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட புடின் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் 6 ஆவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்று 2030 வரை ஜனாதிபதியாக புடின் தொடர்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version