உலகம்

கென்யா மற்றும் சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு

Published

on

கென்யா மற்றும் சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு

கென்யா மற்றும் சோமாலியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதுடன் வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.

அத்துடன் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் அவசர நிலை பிறப்பித்துள்ளதுடன் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.

சோமாலியாவில் கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது. தற்போது அங்குள்ள ஜூபாலாந்து மாகாணத்தில் கனமழை பெய்தது

ஜூபா மற்றும் ஷாபெல்லே ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 25 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஜூபா மற்றும் ஷபெல்லே நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஜூபாவின் முழுப் பகுதியிலும் வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.

லுக் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள சுமார் 2,400 குடியிருப்பாளர்களை அடைய அவசர மற்றும் மீட்புப் படையினர் முயற்ச்சித்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version