இந்தியா

ஆதித்யா – எல்1 விண்கலம்: முதல் தகவல்

Published

on

ஆதித்யா – எல்1 விண்கலம்: முதல் தகவல்

சூரியனை ஆய்வு செய்ய ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் ஆதித்யா – எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை வெற்றிகரமாக பதிவு செய்து அனுப்பியுள்ளது.

கடந்த 29ஆம் திகதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி உயர் ஆற்றல் கொண்ட சூரிய கதிர்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது.

உயர் ஆற்றல் சூரிய கதிர்கள் குறித்து ஆதித்யா-எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஹெச்இஎல்10எஸ் கருவி நன்றாக ஆய்வு செய்துவருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

Exit mobile version