உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் களம்: பாதுகாப்பு தலைமை சீனாவின் கைகளில்

Published

on

இஸ்ரேல் – ஹமாஸ் களம்: பாதுகாப்பு தலைமை சீனாவின் கைகளில்

தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை சீனா ஏற்றுள்ளமை சர்வதேசத்தை உற்றுநோக்க வைத்துள்ளது.

உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ஐ.நா. சபையின் 6 அங்கங்களில் ஒன்றான யு.என்.எஸ்.சி. (UNSC) எனப்படும் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது.

1945 அக்டோபரில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 15ஆகவும் இதில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும் காணப்படுகின்றனர்.

பாதுகாப்பு அமைப்பின் தலைமை பதவி, அதன் உறுப்பு நாடுகளால் சுழற்சி முறையில் மாதம் ஒரு நாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் புரிந்து வரும் இஸ்ரேல், உலக நாடுகளின் போர் நிறுத்த கோரிக்கையை புறக்கணித்து, தாக்குதலை மேலும் கடுமையாக்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் தலைமை பதவியை சீனா ஏற்று கொண்டது.

தற்போது தீவிரமடைந்துள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் உலகளாவிய அமைதிக்கு சீனாவின் தலைமை பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

“பாதுகாப்பு அமைப்பின் கடமையை சரிவர செய்ய சீனா அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஒருமித்த கருத்தை உலக நாடுகளிடையே உருவாக்கவும், பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தில்லாத நிலையை கொண்டு வரவும் சீனா அனைத்து வகையிலும் முன் நிற்கும்” என இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் தலைமை பதவி குறித்து சீனாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வேங் வென்பின் (Wang Wenbin) கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இறுதியாக 2022 ஆகஸ்ட் மாதம் சீனா இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version