உலகம்

ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு பயண எச்சரிக்கை விடுத்த கனடா

Published

on

ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு பயண எச்சரிக்கை விடுத்த கனடா

நைஜீரியாவில் உள்ள கனேடிய தூதரகத்தில் வெடிகுண்டு வெடித்து இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கனடா விசாரணை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவுக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை அடுத்து கனடாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நைஜீரியாவில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தில் வெடிப்பு ஏற்பட்டதை உறுதி செய்துள்ளதாகவும், தீ அணைக்கப்பட்டு, இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை அறிய விசாரணை முன்னெடுக்கபப்ட்டு வருவதாகவும் அமைச்சர் ஜோலி சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

மட்டுமின்றி, இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நைஜீரிய ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளரும் நடந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி டினுபு இறந்தவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திப்பதோடு காயமடைந்த அனைவரும் விரைவாகவும் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறார் என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version