உலகம்

லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தடை விதிக்க இஸ்ரேல் ஜனாதிபதி அழைப்பு

Published

on

லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தடை விதிக்க இஸ்ரேல் ஜனாதிபதி அழைப்பு

லண்டனில் நினைவேந்தல் தினத்தில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என இஸ்ரேல் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

திட்டமிடப்பட்டுள்ள பாலஸ்தீன ஆதரவு லண்டன் பேரணியை கொடூரமான நடவடிக்கை மற்றும் வெறும் பாசாங்குத்தனமானது எனவும் ஜனாதிபதி ஈசாக் ஹெர்சாக் குற்றஞ்சாட்டினார்.

மட்டுமின்றி, அனைத்து கண்ணியமான நபர்களும் அணிவகுப்பை புறக்கணிப்பார்கள் எனவும், அரசாங்கம் தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

காஸாவில் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி ஈசாக் ஹெர்சாக், இஸ்ரேல் மக்களுக்கு தங்களை காக்க உரிமை உண்டு என்றார். மேலும், ஈரானை கடுமையாக விமர்சித்த அவர், உலக நாடுகளில் உள்ள எனது நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,

ஐ.எஸ், ஹமாஸ் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் எங்கள் தலையை காவு கொள்ள துடிக்கிறார்கள், நாளை அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள் எனவும், உலக நாடுகளுக்கு விடுக்கப்படும் உண்மையான சவால் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version