உலகம்

பிரான்சில் கதவை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மர்ம நபரை தேடும் பொலிஸார்

Published

on

பிரான்சில் கதவை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மர்ம நபரை தேடும் பொலிஸார்

பிரான்ஸ் நாட்டில் 30 வயது பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Montluc மாவட்டத்தின் லியோனின் 3வது வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் 30 வயது பெண்ணொருவர் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது தனது வீட்டில் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தபோது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் அவரது வயிற்றில் இருமுறை கத்தியால் குத்தியுள்ளார் என்பது தெரிய வந்தது.

மேலும், அவரது வீட்டு வாசலில் ஸ்வஸ்திகா வர்ணம் பூசப்பட்டதைக் கண்டுபிடித்த பொலிஸார், கருப்பு உடை அணிந்த சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

அத்துடன் அவர் யூதப் பெண் என்பது தெரிய வந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை அடுத்து பிரான்ஸ் யூத-விரோத தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து பிரான்சில் ‘857 யூத எதிர்ப்பு செயல்கள்’ நடந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்சில் உள்ள யூதர்கள், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் யூத-விரோதத்தை அதிகரித்து, வன்முறையின் இலக்குகளாக ஆக்கிவிட்டதாக அஞ்சுவதாக கூறப்படுகிறது.

Exit mobile version