உலகம்

புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்கள் கொழும்பில் நாட்களை செலவிட வேண்டாம்!

Published

on

புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்கள் கொழும்பில் நாட்களை செலவிட வேண்டாம்!

இலங்கையின் பண்டைய வரலாற்று சான்றுகளில் தமிழர்களின் மரபுகளும், வரலாற்று சான்றுகளும் தற்போது பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த நிலையில் இலங்கையை ஆண்ட சோழர்களின் வரலாறானது தமிழர் பாரம்பரியத்தின் பல்வேறு அடையாளங்களை இந்த நாட்டில் உருவாக்கியுள்ளது.

மொழி, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை, கட்டடக்கலைகள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு சோழர்கள் விட்டு சென்றுள்ளனர் .

அவ்வாறு இலங்கையில் சோழர் ஆட்சி காலத்தில் பொலன்னறுவையில் கட்டப்பட்ட இரண்டாம் சிவ ஆலயமும் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் கொழும்பில் பொருட்களை வாங்குவதற்கும் கொழும்பை சுற்றி பார்ப்பதற்கும் நாட்களை செலவிடுவதை நிறுத்திவிட்டு எமது வரலாற்றை தேடி செல்லுங்கள் எமது வரலாற்றை பாதுகாப்பதற்கு வழிவகுங்கள் என பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version