உலகம்
9ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை பலிகொண்ட இஸ்ரேல் யுத்தம்
9ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை பலிகொண்ட இஸ்ரேல் யுத்தம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கி இதுவரையான நாட்களில் 9,061 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் போர் மூண்டது. இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 3 வாரங்களில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துச் செல்கின்றது.
உயிரிழந்துள்ள 9ஆயிரத்திற்கு மேற்பட்டோரில் இதில் 18 வயதிற்கு உட்பட்ட 3,760 சிறுவர்களும் உள்ளடங்குவர்.
இதேவேளை, இந்த யுத்தத்தில் இஸ்ரேல் தரப்பில் இருந்து 1,400 பேர் உயிரிழந்துள்ளனர்.
போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 100இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ரபா எல்லை வழியாக வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றையதினம் இஸ்ரேல் தரைவழிப்படைகள் நேற்று காசாவை நோக்கி மேலும் முன்னேறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.