உலகம்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தகவல்

Published

on

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தகவல்

பாகிஸ்தானில் 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வழியே நீக்கப்பட்டதோடு அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மையற்ற நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசினால் நாடாளுமன்றம் நடப்பு ஆண்டின் ஆகஸ்டு 9ஆம் திகதி கலைக்கப்பட்டது. இதன்பின்பு, 90 நாட்களுக்குள் நாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறி தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.

ஆனால், அந்நாட்டின் புதிய மக்கள்தொகை விகிதாசார தரவுகளுக்கு ஏற்ப புதிய நாடாளுமன்ற எல்லைகளை நிர்ணயிக்கும் மறுசீரமைப்பில், தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்ததால், தேர்தல் தள்ளி போடப்பட்டது.

இந்நிலையில், இறுதியாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை அறிவித்து உள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் திகதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version