உலகம்

அண்டார்டிக்காவில் ஆய்வு தளம் அமைக்கும் சீனா

Published

on

அண்டார்டிக்காவில் ஆய்வு தளம் அமைக்கும் சீனா

அண்டார்டிக்காவில் புதிய ஆராய்ச்சி மையம் ஒன்றை கட்டியெழுப்ப சீனா திட்டமிட்டு உள்ளதாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் செய்தி நிறுவனமொன்று தகவல் தெரிவித்துள்ளது.

ராஸ் கடலின் கடலோர பகுதியில் 5ஆவது ஆராய்ச்சி மையத்திற்கான கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறித்த பணியை வருகிற 2024ஆம் ஆண்டு பெப்ரவரிக்குள் நிறைவு செய்வது என சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக 80 சீன மையங்களை சேர்ந்த 460 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் அடங்கிய சரக்கு கப்பல் ஒன்றும் அண்டார்டிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கட்டுமான பணியுடனுடாக அண்டார்டிக்காவின் சுற்றுச்சூழலில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட கூடிய பாதிப்பு பற்றி ஆராய்ச்சி குழு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

கிழக்கு அண்டார்டிக்காவில் அமையுவுள்ள புதிய தளத்துடன், செயற்கைக்கோள் நிலையம் ஒன்றும் மற்றும் கண்காணிப்பகமும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version