உலகம்

மீண்டும் வாக்னர் கூலிப்படை: பிரிகோஜின் மகன் தலைமையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம்

Published

on

மீண்டும் வாக்னர் கூலிப்படை: பிரிகோஜின் மகன் தலைமையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம்

ரஷ்ய தேசிய காவலர் படையின் ஒற்றை அங்கமாக தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மகன் பாவெல் பிரிகோஜின் தலைமையில் வாக்னர் கூலிப்படை ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மீண்டும் தொடங்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதலில் ரஷ்யாவிற்கு சார்பாக வாக்னர் கூலிப்படை போரில் களமிறங்கியது.

ஆனால் ரஷ்ய ராணுவ படைக்கும், வாக்னர் கூலிப்படைக்கும் ஏற்பட்ட அறிப்படாத முரண்பாடுகளை தொடர்ந்து, வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தனது படைகளை ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுத்து அழைத்து சென்றார்.

இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதுன், வாக்னர் கூலிப்படை கலைக்கப்பட்டது, அதன் வீரர்கள் பெலாரஸ் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது.

அத்துடன் எவ்ஜெனி பிரிகோஜன் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் மர்மமான விமான விபத்தில் அவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் விபத்தில் கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினின் மகன் பாவெல் பிரிகோஜின் தலைமையில் வாக்னர் கூலிப்படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மீண்டும் தொடங்கி இருக்கலாம் என அறிக்கைகள் வெளியாகி வருகிறது.

அத்துடன் இவை ரஷ்ய தேசிய காவலர் படையின்(Rosgvardiya) ஒற்றை அங்கமாக உருவாக்கப்படுவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் உக்ரைனின் தேசிய எதிர்ப்பு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், ரஷ்யாவின் தென் மேற்கு நகரமான வோரோனேஜில் வாக்னர் உறுப்பினர்கள் உட்பட 10000 பேருக்கான முகாம்களை ரஷ்ய தேசிய காவலர் படை (Rosgvardiya) அமைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

இவை உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நாசகரமான செயல்களை செய்வதற்காக திட்டமிட்டு முகாமிட்டு இருப்பதாகவும் உக்ரைன் தேசிய எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version