உலகம்
இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் பின்வாங்கும் ஈரான்
இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் பின்வாங்கும் ஈரான்
காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்தவுடன், “சிவப்பு எல்லையை இஸ்ரேல் தாண்டிவிட்டது” என ஈரான் பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.
தற்போது சிரியாவிலும், லெபனானில் உள்ள ஹமாஸின் தளங்கள் மீது இஸ்ரேல் பாரியளவான குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இஸ்ரேல் மீது இராணுவ நடவடிக்கைகளையும், தாக்குதல்களையும் ஈரான் ஏன் முன்னெடுக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரானுக்கு ஆயிரம் கரணங்கள் இருந்தும், ஈரான் பின்வாங்கும் நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக போரியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவ்வாறானதொரு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால், ஈரானுக்கு கிடைக்கும் சாதகமான விடயங்களை விட பாதிப்புக்கள் பலமடங்கு அதிகமாக காணப்படும் எனவும் அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.