உலகம்

ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய குண்டு: கமெராவில் சிக்கியுள்ள காட்சி

Published

on

ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய குண்டு: கமெராவில் சிக்கியுள்ள காட்சி

ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் கையெறி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம், ஜேர்மனியின் பிராங்க்பர்ட் ரயில் நிலையம் ஒன்றில் சந்தேகத்துக்குரிய ஒரு பொருள் கிடப்பதாக பயணிகள் பொலிசாருக்கு தகவலளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

சந்தேகத்துக்குரிய அந்த பொருள் ஒரு கையெறிகுண்டு என்பதும், அது பயன்பாட்டில் உள்ள ஒரு குண்டு என்பதும் தெரியவந்தது.

அந்த கையெறிகுண்டு வெடித்தால், 20 மீற்றர் சுற்றளவில் உள்ளவர்களை கொல்லக்கூடிய சக்தி வாய்ந்தது என ஜேர்மன் ஊடகமான Bild தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியிலிருந்த CCTV கமெராக்களில், செவ்வாய்க்கிழமை அதிகாலை, மாஸ்க் அணிந்த ஒருவர் கையெறிகுண்டு ஒன்றை விட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதிகாலை 4.18 மணிக்கு, ஆண் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் ரயில் நிலையத்தில் நடமாடுவதும், சிறிது நேரத்துக்குப் பின், அவர் கையெறிகுண்டு ஒன்றை கீழே வைத்துவிட்டு மெதுவாக அங்கிருந்து வெளியேறுவதும் கமெராவில் பதிவாகியுள்ளது.

தங்களுக்கு இந்த சம்பவம் குறித்து சில துப்புக்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Exit mobile version