உலகம்

இஸ்ரேல் – காஸா போர்… கோரிக்கையை மொத்தமாக நிராகரித்த அமெரிக்கா

Published

on

இஸ்ரேல் – காஸா போர்… கோரிக்கையை மொத்தமாக நிராகரித்த அமெரிக்கா

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனக் குழுவான ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான உலகளாவிய கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி திங்கள்கிழமை இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மனிதாபிமான உதவிகளை காஸா பகுதிக்கு முன்னெடுக்கும் போது தாக்குதலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கலாம் என கிர்பி பரிந்துரைத்துள்ளார்.

தற்போது, காசாவின் 2.2 மில்லியன் மக்களுக்கான உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மருந்துகளின் விநியோகம் ஆபத்தான முறையில் குறைந்துள்ளது.

ஆனால், ஹமாஸ் படைகளை ஒடுக்காமல் போர் நிறுத்தம் என்பது இல்லை என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் என்றால் இஸ்ரேல் ஹமாஸிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திற்கு சரணடைய வேண்டும்… இது நடக்காது என தெரிவித்துள்ளார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

இதனிடையே கிர்பி தெரிவிக்கையில், மேலதிக உதவிகள் எகிப்து வழியாக காஸாவுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றே நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும் எல்லையை கடக்கும் லொரிகளின் எண்ணிக்கையை சுமார் 100 ஆக அதிகரிப்பது குறித்து இஸ்ரேல் அரசாங்கத்துடன் அமெரிக்கா பேசியதாக அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் எகிப்தின் ரஃபா கிராசிங் வழியாக சுமார் 45 டிரக்குகள் காஸாவிற்குள் நுழைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் தொடுத்துள்ள தாக்குதலில் இதுவரை 8,300 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version