உலகம்

காசாவில் மணிப்பூர் சம்பவம்: உறுதி செய்த இஸ்ரேல்

Published

on

காசாவில் மணிப்பூர் சம்பவம்: உறுதி செய்த இஸ்ரேல்

காசாவில் மணிப்பூர் சம்பவம் போன்று இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

கொலைசெய்யப்பட்ட இளம்பெண் இஸ்ரேல் படையைச் சேர்ந்தவர் என ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில், அவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்பதை இஸ்ரேல் அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் காசா எல்லையில் அமைதி நிலவ வலியுறுத்தி நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இஸ்ரேலுக்கு வருகை தந்த ஷானி லோவுக் என்ற பெண்ணே ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட இளம்பெண் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்தவர் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், உயிரிழந்தவர் ஷானி லோவுக் என்றும் அவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்றும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பாக ஷானி லோவுக்கின் தாயார் மற்றும் சகோதரியின் சமூகவலைதள பதிவும் வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் இருப்பது தனது மகள் என்று அவரின் உடலில் இருக்கும் டாட்டூக்களையும் ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.தனது மகளின் உடலையாவது ஒப்படைக்கும்படி ஹமாஸ் படையினருக்கு கோரிக்கை வைக்கும் தாயாரின் காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version