உலகம்

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்: 12 000 பேரை வைத்தியசாலையை விட்டு வெளியேற்ற உத்தரவு

Published

on

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்: 12 ஆயிரம் பேரை வைத்தியசாலையை விட்டு வெளியேற்ற உத்தரவு

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் யுத்தம் 3 வாரங்களை தாண்டி நீடித்து வருகின்ற நிலையில் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் கடுமையான தாக்குதல் நடத்தியதில் காசாவில் 3,324 குழந்தைகள் உள்பட 8ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை வான் மற்றும் கடல் வழியாக குண்டுகளை வீசி வந்த இஸ்ரேல் ராணுவ படையினர் தரை வழி தாக்குதலையும் நடத்தி வருகின்ற நிலையில் காசாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் படையினர் பீரங்கி வண்டிகளுடன் நகருக்குள் ஊடுருவி கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காசாவில் உள்ள மிகப்பெரிய வைத்தியசாலையில் ஹமாஸ் படையினர் தங்களின் இரகசிய தளம் அமைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதோடு இது தொடர்பான சில புகைப்படங்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் உயிருக்கு பயந்து 12 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலை அருகே உள்ள ஹமாஸ் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் போர் விமானங்கள் இங்கு தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதால் வைத்தியசாலையில் பதுங்கி இருக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதோடு போர் தீவிரம் அடைந்துள்ளதால் 12 ஆயிரம் பேரையும் உடனடியாக வைத்தியசாலையில்இருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version