உலகம்

இஸ்ரேலிய படையினர் மீது காசாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையால் தாக்குதல்

Published

on

இஸ்ரேலிய படையினர் மீது காசாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையால் தாக்குதல்

காசாவில் முன்னோக்கி நகரமுயலும் இஸ்ரேலிய படையினர் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவின் தென்பகுதிக்குள் ஊடுருவ முயலும் இஸ்ரேலிய படையினர் மீது இயந்திரதுப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஹமாசின் ஆயுதப்பிரிவு தெரிவித்துள்ளது.

அல்யாசின் 105 ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாகவும் அறிவித்துள்ளது. அல்யாசின் என்பது காசாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் ஆகும்.

காசாவின் வடமேற்கு பகுதியில் இஸ்ரேலின் புல்டோசர்களையும் டாங்கிகளையும் ஏவுகணைகளை பயன்படுத்தி இலக்குவைத்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அதேவேளை இதனை உறுதி செய்ய முடியவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேல் இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.

எனினும் பணயக்கைதிகள் விடுதலை குறித்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக இஸ்ரேலிய படையினர் மிகவும் மெதுவாகவே நகர்கின்றதாகவும் கூறப்படுகின்றது.

Exit mobile version