உலகம்

எந்த பலனும் இல்லை… 90,000 வீரர்களை இழந்தார்கள்: உக்ரைனை குறிவைக்கும் ரஷ்யா

Published

on

எந்த பலனும் இல்லை… 90,000 வீரர்களை இழந்தார்கள்: உக்ரைனை குறிவைக்கும் ரஷ்யா

உக்ரைன் ராணுவம் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய எதிர்த் தாக்குதல் நடவடிக்கையல் சுமார் 90,000 இராணுவத் துருப்புக்களை அந்த நாடு இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையால், உக்ரைன் எதையும் சாதிக்கவில்லை எனவும் ரஷ்ய தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் நிதியுதவியுடன் ஜூன் 4ம் திகதி எதிர்த் தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்ததாக கூறும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு,

இதனால் உக்ரைன் 90,000 வீரர்களை இழந்துள்ளதாகவும், 600 டாங்கிகள், மற்றும் பல்வேறு பிரிவுகளின் கிட்டத்தட்ட 1,900 கவச வாகனங்களையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், போர்க்களத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மோதலின் தீர்வு பற்றிய விவாதங்களுக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேவையான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டால், யதார்த்தமான அடிப்படையில் அரசியல் விவாதங்களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

இதனிடையே, பிப்ரவரி 24, 2022 அன்று படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா போரில் தோராயமாக 299,940 துருப்புக்களை இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

Exit mobile version