உலகம்

இந்தியாவில் இருந்து பயணிப்போர்களுக்கு 1000 டொலர் வரி வசூலிக்கும் நாடு

Published

on

இந்தியாவில் இருந்து பயணிப்போர்களுக்கு 1000 டொலர் வரி வசூலிக்கும் நாடு

இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் 50 நாடுகளில் இருந்தும் பயணிக்கும் மக்களிடம் 1000 டொலர் வரி வசூலிக்க இருப்பதாக எல் சல்வடோர் நாடு அறிவித்துள்ளது.

மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் வழியாக அமெரிக்காவிற்கு புலம்பெயர்வதைத் தடுப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாகவே இந்த வரி வசூல் முடிவுக்கு விளக்கமளிக்கின்றனர்.

இந்தியா அல்லது 50 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஏதேனும் ஒன்றின் கடவுச்சீட்டில் பயணம் செய்பவர்களும் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எல் சால்வடாரின் துறைமுக நிர்வாகம் அக்டோபர் 20ம் திகதி அதன் இணையதளத்தில் அறிக்கை ஊடாக குறித்த தகவலை தெரிவித்துள்ளது.

மேலும், திரட்டப்படும் பணம் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் புலம்பெயர் மக்கள் மத்திய அமெரிக்கா வழியாக அமெரிக்காவிற்கு செல்வதாக கூறப்படுகிறது.

மேலும், VAT உட்பட மொத்தம் 1130 டொலர் வசூலிக்க உள்ளனர். இப்படியான மக்களால் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தின் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாகவே சிறப்பு கட்டணம் வசூலிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா உட்பட பட்டியலிடப்பட்டுள்ள 57 நாடுகளில் இருந்து வரும் பயணிகளைப் பற்றி சால்வடோரன் அதிகாரிகளுக்கு விமான நிறுவனங்கள் தினசரி தெரிவிக்க வேண்டும்.

இதனிடையே, கொலம்பிய விமான நிறுவனம் ஏவியங்கா இந்த விவகாரம் தொடர்பில் தனது பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த விமானத்தையே பெரும்பாலான புலம்பெயர் மக்கள் நாடுவதாக கூறப்படுகிறது.

Exit mobile version