உலகம்

பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம்… ஊக்குவிக்கும் இஸ்ரேல் பிரதமர்

Published

on

பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம்… ஊக்குவிக்கும் இஸ்ரேல் பிரதமர்

ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் என இஸ்ரேல் பிரதமர் பொதுமக்களை ஊக்குவித்துள்ள நிலையில், துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இஸ்ரேல் மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்வதை ஊக்குவிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார்.

இம்மாதம், அதாவது, அக்டோபர் 7ஆம் திகதி, திடீரென ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நிகழ்த்தியதில் ஏராளம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். ஆயுதங்கள் வைத்திருந்த சிலர், தங்கள் கிராமங்களுக்காக எதிரியை எதிர்த்து போராடினார்கள், அதில் சிலர் வெற்றியும் பெற்றார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், என்னை நானே காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என எண்ணம் பலருக்கும் உருவாகியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்வதை ஊக்குவிப்பதாக இஸ்ரேல் பிரதமரும் கூற, மக்கள் துப்பாக்கிகள் வாங்குவதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளார்கள்.

இதற்கிடையில், இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

உண்மையில், இஸ்ரேல் கடுமையான துப்பாக்கி விதிகள் கொண்ட நாடாகும். அந்நாட்டில், பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு சட்டப்படி அனுமதி கிடையாது.

ஆனால், அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து மக்கள் துப்பாக்கிகள் வாங்க விண்ணப்பிக்கத் துவங்கியுள்ளார்கள்.

அதே நேரத்தில், அரசும் துப்பாக்கி விதிகளை தளர்த்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள், மருத்துவ அவசர உதவிக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நல்ல உடல் நிலையுடன் இருக்கும் மற்றும் குற்றப்பின்னணி எதுவும் இல்லாத பொதுமக்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன் 50 துப்பாக்கிக்குண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 100 குண்டுகள் வைத்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version