இந்தியா

கனடாவிற்கான விசா சேவை ஆரம்பித்த இந்தியா

Published

on

கனடாவிற்கான விசா சேவை ஆரம்பித்த இந்தியா

கனடா நாட்டிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் வழங்க ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

கனடாவின் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் 18ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது கனடா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதன் காரணத்தினால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அத்துடன் இரு நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப பெற்றுக் கொண்டனர்.

மேலும் கனடாவின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த இந்தியா, கனடாவிற்கான விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், கனடா நாட்டிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் வழங்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது..

இதன்மூலம் கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவைகள் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி வணிகம், மருத்துவம், உள்ளிட்டவை தொடர்பான விசா வழங்கும் சேவைகளும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version