உலகம்

ஏராளமான யூதர்களை கொன்ற ஹமாஸ் போராளி

Published

on

ஏராளமான யூதர்களை கொன்ற ஹமாஸ் போராளி

ஹமாஸ் போராளி ஒருவர் தாம் யூதர்கள் ஏராளமானோரை கொன்றுவிட்டதாக தனது தந்தையுடன் பேசிய தொலைபேசி ஒலிப்பதிவை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்குள் கடந்த (07.10.2023) திகதி ஊடுருவிய ஹமாஸ் போராளி, வயதான தம்பதியரை கொன்றுவிட்டு, பின் அவர்களது தொலைபேசியிலிருந்து காசாவில் வசிக்கும் தமது பெற்றோருடன் பேசியதாக கூறப்படுகிறது.

அந்த ஒலிப்பதிவில், உங்கள் மகன் ஏராளமான யூதர்களை கொன்று விட்டதால் தலை நிமிர்ந்து நடக்குமாறு தாய் தந்தையரிடம் கூறும் அந்த போராளி, கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பத்திரமாக திரும்பி வருமாறு மகனிடம் அந்த தாயார் கூறுவதும் உரையாடலில் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வணக்கம் அப்பா, நான் மெபல்சிமில் இருந்து உங்களிடம் பேசுகிறேன். இப்போது எனது வாட்ஸ்அப்பைத் திறக்கவும்,என் கைகளால் எத்தனை பேரைக் கொன்றேன் என்று பாருங்கள்.

“அப்பா, நான் ஒரு யூதப் பெண்ணின் தொலைபேசியிலிருந்து உங்களிடம் பேசுகிறேன். அவளையும் அவள் கணவனையும் கொன்றேன்.

நான் என் சொந்த கைகளால் 10 பேரைக் கொன்றேன். அப்பா வாட்ஸ்அப்பை திறந்து நான் எத்தனை பேரைக் கொன்றேன் என்று பாருங்கள் என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version