உலகம்

அமெரிக்காவுடன் கைகோர்க்கும் சீனா

Published

on

அமெரிக்காவுடன் கைகோர்க்கும் சீனா

சர்வதேச சவால்களை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்த விடயம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்கா – சீனா இடையிலான உறவானது கடந்த காலங்களில் விரிசல் நிலையில் காணப்பட்டது.

இதற்கு முக்கிய காரணமாக சீனாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சியும், சர்வதேச சந்தையில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டித்தன்மையும் என ஆய்வாளர்களினால் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கருத்து வேறுபாடுகளை களைந்து சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீன தேசிய குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

“தற்போதைய உலகிற்கு அமெரிக்காவும், சீனாவும் இணைந்து சரியான பாதையை அமைப்பது முக்கியமான ஒன்றாகும்.

கொள்கைகளின் அடிப்படையில் சம ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை ஆகியவற்றை கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே நிலையான உறவு கட்டமைக்கப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் இந்த வார இறுதியில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், சீன ஜனாதிபதி ஜின்பிங் இவ்வாறு கடிதம் எழுதியிருப்பது சர்வதேசத்தின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

Exit mobile version