உலகம்

பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை… ஜோ பைடன்

Published

on

பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை… ஜோ பைடன்

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காஸா பகுதியில் கொல்லப்பட்டுள்ள பலஸ்தீனியர்கள் எண்ணிக்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களுக்கு இதுவரை காஸா பகுதியில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 6,500 கடந்துள்ளது என்றே அங்குள்ள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

புதன்கிழமை வெள்ளைமாளிகையில் முனெடுக்கப்பட்ட ஊடகப்பிரிவினர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விக்கே ஜோ பைடன் இரக்கமற்ற பதிலை அளித்துள்ளார்.

2,700 சிறார்கள் உட்பட பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளது, அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்கவில்லை என கருதலாமா என கேள்வி முன்வைத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள பைடன், எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது பற்றி பாலஸ்தீனியர்கள் உண்மையைச் சொல்கிறார்களா என்பதில் எனக்கு எந்த கருத்தும் இல்லை.

போரில் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள் என்பது உண்மைதான், அது போரை நடத்தியதற்கான விலை என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்ரேல் இனி மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும், இது இஸ்ரேலுக்கு எதிரான சூழ்ச்சியாகவும் இருக்கலாம் என்றார். மேலும் பாலஸ்தீனியர்கள் கூறும் இறப்பு எண்ணிக்கையில் தமக்கு உடன்பாடில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பாலஸ்தீனியர்கள் கூறும் இறப்பு எண்ணிக்கை ஏன் ஜோ பைடனை சந்தேகம் கொள்ள வைக்கிறது என்பதற்கு அவர் விளக்கமளிக்கவில்லை. அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில் 1,400 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகளே அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், காஸா பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் ஜோ பைடன் சந்தெகம் தெரிவித்துள்ளதை பாலஸ்தீன நிர்வகம் புறந்தள்ளியுள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் இயங்கும் CAIR என்ற அமைப்பு ஜோ பைடனின் கருத்துக்கு தங்கள் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதி பைடன் உடனடியாக மன்னிப்பு கேட்கவும் கோரிக்கை வைத்துள்ளது.

மேலும் உலகெங்கிலும் உள்ள பத்திரிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளனர், மேலும் காசாவில் இருந்து தினமும் வெளிவரும் எண்ணற்ற வீடியோக்கள் பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகளின் சிதைந்த உடல்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜோ பைடன் மேலும் தெரிவிக்கையில், ஹமாஸ் படையினர் பாலஸ்தீன பொதுமக்களின் பின்னால் சென்று ஒளிந்துகொண்டுள்ளனர். இது ஹமாஸ் பின்னால் செல்ல இஸ்ரேலுக்கு சிக்கலாக உள்ளது என்றார்.

மேலும், அப்பாவி பொதுமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version