உலகம்
கைகளில் தங்கள் பெயர்களை எழுதிக்கொள்ளும் பாலஸ்தீன சிறுவர்கள்… நெஞ்சை உலுக்கும் பின்னணி
கைகளில் தங்கள் பெயர்களை எழுதிக்கொள்ளும் பாலஸ்தீன சிறுவர்கள்… நெஞ்சை உலுக்கும் பின்னணி
காஸா மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் உக்கிரமைடைந்துவரும் நிலையில், பாலஸ்தீன சிறார்கள் தங்கள் கைகளில் தங்களின் பெயர்களை எழுதி வைத்துக்கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களில் சிக்கி கொல்லப்பட்டால், சடலங்களை அடையாளம் காணவே சிறார்கள் தங்களின் பெயர்களை தங்கள் கைகளில் எழுதிக்கொள்வதாக கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பரவலாக பலரது கவனத்தையும் ஈர்த்துவரும் காணொளி ஒன்றில், சிறார்கள் பலர் தங்களின் நண்பர்களுக்கு அவர்களின் பெயர்களை கைகளில் எழுதுவதாக பதிவாகியுள்ளது.
அதில் ஒரு சிறுவன், இல்லை, நான் இறக்க விரும்பவில்லை என கண்கலங்குவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது. பிரபல மருத்துவர் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில், பாலஸ்தீன பெற்றோர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்,
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மட்டுமின்றி, தங்கள் பிள்ளைகளை எவராலும் அடையாளம் காண முடியாமல் போகலாம் என வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். Al-Aqsa மருத்துவமனையின் இன்னொரு மருத்துவர் தெரிவிக்கையில்,
பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை தங்கள் கால்களில் எழுதிக்கொண்டுள்ளதாகவும், இதனால் அடையாளம் காண வாய்ப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
காஸா பகுதியில் இதுபோன்ற புதிய நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்படுவதாகவும், இஸ்ரேலின் உக்கிர தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை எனவும் கூறுகின்றனர்.
Al-Aqsa மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறார்கள் பலர் படுகாயமடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அடையாளம் காண்பதே முடியாத நிலையில், இதுபோன்ற பெயர் எழுதும் செயல்கள் உதவியாக உள்ளது என்கிறார் மருத்துவர் ஒருவர்.
அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறார்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர் என UNICEF உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.