உலகம்

குழந்தையாக மாயமாகி இளம்பெண்ணாக திரும்பவந்த பெண் வழக்கு: வெளியாகியுள்ள திடுக் தகவல்

Published

on

குழந்தையாக மாயமாகி இளம்பெண்ணாக திரும்பவந்த பெண் வழக்கு: வெளியாகியுள்ள திடுக் தகவல்

அமெரிக்காவில் காணாமல் போன ஒரு சிறுமி, நான்கு ஆண்டுகளுக்குப் பின் 18 வயது இளம்பெண்ணாக பொலிஸ் நிலையம் ஒன்றை வந்தடைந்த சம்பவத்தில் திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த அலிஷியா (Alicia Navarro), 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென மாயமானாள். அப்போது அவளுக்கு வயது 14. சில நாட்களில் அவள் தனது 15ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருந்தாள்.

அம்மா, நான் வீட்டை விட்டு போகிறேன், என்னை மன்னித்துவிடுங்கள். ஆனால், சத்தியமாக திரும்பிவந்துவிடுவேன் என ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு அவள் மாயமாகியிருந்தாள்.

அவளை ஒன்லைனில் சந்தித்த யாரோ ஒருவர், அவளை ஏமாற்றி, எங்கோ கொண்டு சென்றுவிட்டதாக அவளது தாயார் புகாரளிக்க, FBI அவளை தீவிரமாகத் தேடிவந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு, ஜூலை மாதத்தில் ஒருநாள், கனடா எல்லையிலுள்ள Montana மாகாண பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் 18 வயது இளம்பெண் ஒருவர் திடீரென நுழைந்துள்ளார்.

தான்தான் காணாமல் போன அலிஷியா என அவர் கூற, பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். உடனடியாக அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

அலிஷியாவை பின் தொடர்ந்த பொலிசார், அவள் வாழ்ந்து வந்ததாக தெரியவந்த வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்கள். அலீஷியா கதவைத் திறக்கும்போது, வீட்டுக்குள், சமையலறையில் நின்ற எட்மண்ட் டேவிஸ் (Edmund Davis, 36) என்னும் நபர் தனது மொபைல் போனை குப்பைக்கூடைக்குள் போட்டு அதன் மீது சில பொருட்களைப் போட்டு அதை மறைத்துவைப்பதை பொலிசார் கவனித்துள்ளார்கள்.

வீட்டுக்குள் நுழைந்த பொலிசார் அந்த மொபைல் போனைக் கைப்பற்றி சோதனை செய்ய, அதில் ஏராளமான சிறார் துஷ்பிரயோக புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

13 வயதுக்கு குறைவான மற்றும் 5 வயதுக்குக் குறைவான சிறுமிகளின் ஆபாசப் படங்களும் அந்த மொபைலில் இருந்துள்ளன.

இன்னொரு விடயம் என்னவென்றால், 14 வயது முதல், அலீஷியாவும் டேவிஸும் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்திவந்துள்ளார்கள். 18 வயதானதும், இனி என்னைத் தேடவேண்டாம், காணாமல் போனவர்கள் பட்டியலிலிருந்து என் பெயரை நீக்கிவிடுங்கள் என்று சொல்வதற்காகத்தான் அவள் பொலிஸ் நிலையம் வந்திருக்கிறாள்.

திங்கட்கிழமை, டேவிஸ் முறைப்படி கைது செய்யப்பட்டுள்ளார். வயது வராத பெண்ணிடன் பாலுறவு வைத்துக்கொண்டது மற்றும் சிறார் துஷ்பிரயோக புகைப்படங்கள் வைத்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டேவிஸுக்கு 100 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version