உலகம்
இவருடன் 33 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறேன்… சூப்பர் ஸ்டார் வெளியிட பதிவு…
இவருடன் 33 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறேன்… சூப்பர் ஸ்டார் வெளியிட பதிவு…
நடிகர் ரஜனி காந்த் “தலைவர் 170” படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் இணைந்து நடிப்பது குறித்து, மிகவும் உருக்கமாக டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று, சுமார் ரூ .600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி.
இதை தொடர்ந்து இமயமலைக்கு ஆன்மீக பணயம் சென்று வந்த ரஜினி, இந்த மாதம் துவங்கப்பட்ட, ‘தலைவர்’ 170 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.ரஜினி நடிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை மிகப்பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இதற்க்கு முன்னர் இயக்குனர் பிரயாக் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த, ‘ஜிராப்டர்’ என்கிற படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் கமலஹாசனும் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் நடிகர் ரஜனி காந்த் குறிப்பிட்ட பதிவில் அவர் கூறியுள்ளதாவது “33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் “தலைவர் 170″ படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” என கூறியுள்ளார்.