உலகம்

இஸ்ரேலை கடுமையாக சாடும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி

Published

on

இஸ்ரேலை கடுமையாக சாடும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி

இஸ்ரேல்– ஹமாஸ் போரில் மனித உயிரிழப்புக்களை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறை பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்கான (காசா) உணவு, நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை நிறுத்துவது என்ற இஸ்ரேல் அரசின் முடிவானது மனிதநேய நெருக்கடியை மோசமடைய செய்கின்றது.

மேலும் குறித்த மனிதாபிமானமற்ற செயல் பல தலைமுறைகளுக்கு பாலஸ்தீனர்களின் சிந்தனைகளை கடினம் ஆக்கிவிடும் என சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை கண்டித்துள்ள ஒபாமா, இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று அந்நாட்டுக்கான தனது ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், இதுபோன்ற போர்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல்- ஹமாஸ் போர் உக்கிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவை தெரிவிக்கும் வகையில் டெல் அவிவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் சென்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் இஸ்ரேல் விஜயங்களைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானின் பயணம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் சென்றடைந்த பிரான்ஸ் ஜனாதிபதியை தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இஸ்ரேல் பிரதமரை சந்திப்பதுடன் பலஸ்தீன தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய 17 வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது.

Exit mobile version