உலகம்
62 வயது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த பாச மகள்
62 வயது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த பாச மகள்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் மகளே தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவின் திருஏறங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப் (62).
இவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ராதாகிருஷ்ண குருப் விரக்தியில் இருந்துள்ளார்.
தந்தையின் நிலையை கண்டு கவலையுற்ற குருப்பின் மகள் ரெஞ்சு, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
இதற்காக அவர் திருமண வரன் பார்க்கக்கூடிய இணையதளங்களில் தந்தைக்கு துணையை தேடினார். அப்போது கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த மல்லிகா குமாரி (60) என்பவரை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் தனது தந்தைக்கு சரியான பொருத்தமாக இருப்பார் என நினைத்த மகள் ரெஞ்சு, அவரது குடும்பத்தினரை தொடர்புகொண்டு பேசி, பின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இருவரது குடும்பத்தினரும் ஒன்றுகூடி ராதாகிருஷ்ண குருப்புக்கும், மல்லிகா குமாரிக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் இருவரது உறவினர்களும் சேர்த்து 50 பேர் கலந்து கொண்டனர்.