உலகம்

நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற போது நேர்ந்த சோகம்

Published

on

நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற போது நேர்ந்த சோகம்

தமிழக மாவட்டம், கோவையில் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்ற போது ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆவில் சின்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பிரதீப் பால்சாமி (37). இவர், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தார்.

இவர், தனது நண்பர்களான ஆல்வின் பிரபு, ஏசுதாஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காடம்பாறை அணை பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

பிரதமர் வேட்பாளராக அண்ணாமலையை அறிவிக்க முடியுமா? சீமான் ஆதரவு
பிரதமர் வேட்பாளராக அண்ணாமலையை அறிவிக்க முடியுமா? சீமான் ஆதரவு
அணையில் நேர்ந்த சோகம்
இவர்கள் நான்கு பேரும் காடம்பாறை அணையில் உள்ள அப்பராளியார் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, பிரதீப் பால்சாமி குளித்துக் கொண்டிருக்கும் போது தண்னீரில் மூழ்கியுள்ளார்.

அதை பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனே, காடம்பாறை காவல் நிலையத்திற்கு நண்பர்கள் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் பிரதீப் பால்சாமியின் உடலை தேட ஆரம்பித்தனர். அந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஆனைமலை புலிகள் காப்பக வனத் துறையினர் உதவியுடன் தேடினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. பின்பு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version