உலகம்

எய்ம்ஸ் செங்கலைத் தொடர்ந்து ‘நீட் முட்டையை’ காண்பித்த உதயநிதி ஸ்டாலின்

Published

on

எய்ம்ஸ் செங்கலைத் தொடர்ந்து ‘நீட் முட்டையை’ காண்பித்த உதயநிதி ஸ்டாலின்

எய்ம்ஸூக்கு செங்கல்லை காண்பித்ததைப் போல் நீட் தேர்வுக்கு முட்டையை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காண்பித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரி திமுக இளைஞர் அணி சார்பில் கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது, விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி தன்னுடைய கையெழுத்தையும் பதிவிட்டு பேசினார்.

அவர் பேசுகையில், “நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவேண்டுமென்று திமுக எடுத்துள்ள முடிவில் அதிமுகவும் கலந்து கொள்ள வேண்டும். தமிழக அரசின் மனதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற நீட் விலக்கு மசோதா 21 மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

மேலும் பேசிய உதயநிதி, “நீட் வந்தால் தரமான மருத்துவர்கள் வருவார்கள். மருத்துவப் படிப்புக்கு பணம் தேவையில்லை என்று சொன்னார்கள். ஆனால், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நீட் தேர்வுக்கு தற்கொலைகள் நடக்கிறது.

தற்போது நீட் முதுநிலை படிப்பு தகுதித்தேர்வில் ‘முட்டை’ மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்கிறார்கள்” என்று கூறி கையில் நீட் என எழுதியிருந்த முட்டையை காண்பித்தார். மேலும் அவர் கண்ணாடி அணிந்து புது கெட்டப்பில் வந்துள்ளார்.

Exit mobile version