உலகம்

லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி

Published

on

லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி

லண்டனில் இஸ்ரேல் – ஹமாஸ் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த பேரணியானது 21.10.2023 முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேரணியில் பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து முழக்கமிட்ட மக்கள், கைகளில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பேரணியிலிருந்த காசா பெண்ணொருவர், “பாலஸ்தீன நாட்டவரான தாம் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறேன். காசாவில் குடும்பத்தினர் உள்ளனர். பாலஸ்தீன விடுதலை தொடர்பில் தீவிர நடவடிக்கை தேவை. தற்போதைய சூழலில் பேரணி ஒன்றே தீர்வாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியானது, மத்திய லண்டனில் தொடங்கி பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தியோகப்பூர்வ இல்லம் முன்பு முடிவடைந்துள்ளது.

பேரணியில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் படங்கள் போர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தடை செய்யப்பட்ட ஹமாஸ் குழுவினருக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றச்செயல் என குறிப்பிடப்பட்டிருந்த போதும், இந்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 100,000 மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்ட போதும் அமைதியான முறையிலேயே இப்பேரணி நடைபெற்றுள்ளது.

Exit mobile version