உலகம்
காசா மக்களுக்கு ஜேர்மனி அறிவித்துள்ள நிதியுதவி
காசா மக்களுக்கு ஜேர்மனி அறிவித்துள்ள நிதியுதவி
காசாவில் வாழும் பொதுமக்களுக்கு ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock, காசாவில் வாழும் பொதுமக்களுக்கு ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், ஜேர்மனி மருத்துவக் குழுக்களையும் காசா பகுதிக்கு அனுப்பத் தயாராகி வருவதாக அவர் கூறியதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜோர்டான் நாட்டிற்குச் சென்றுள்ள Annalena, ஜோர்டான் வெளியுறவு அமைச்சரான Ayman Safadiயுடன் இணைந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்றபோது, எங்கள் செய்தி தெளிவானது, நாங்கள் அப்பாவி பாலஸ்தீனிய தாய்மார்கள், தந்தைகள் மற்றும் குழந்தைகளை கைவிட மாட்டோம் என்றார்.