உலகம்

ஐரோப்பாவில் எக்ஸ் முடக்கம்: எலான் மஸ்க் அதிரடி

Published

on

ஐரோப்பாவில் எக்ஸ் முடக்கம்: எலான் மஸ்க் அதிரடி

ஐரோப்பாவில் எக்ஸ் முடக்கம்: எலான் மஸ்க் அதிரடிஎக்ஸ் வலைதள சேவையை ஐரோப்பாவில் நிறுத்துவதற்கு எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் டிஜிட்டல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கான புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் நடைமுறைப்படுத்தி உள்ளது.

இச்சட்டத்தில் தீங்கிழைக்கும் உள்ளடக்கம் பரவுவதை தடுப்பது, சில பயனர் நடைமுறைகளை தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது சில தரவுகளை பகிர்வது போன்ற விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், முக்கியமாக அனைத்து நிறுவனங்களும் வெளிப்படைத்தன்மையை அனைத்து டிஜிட்டல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை மீறும் நிறுவனங்கள் மீது அதன் உலகளாவிய வருமானத்தில் 6% வரை அபராதம் விதிக்கும் இந்த சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே, இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதை விடுத்து எக்ஸின் சேவையை ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறுத்த எலான் மஸ்க் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

 

Exit mobile version