உலகம்

தென்கொரியாவில் தொடங்கிய இராணுவ கண்காட்சி

Published

on

தென்கொரியாவில் தொடங்கிய இராணுவ கண்காட்சி

இராணுவ பொருட்களை ஏற்றுமதி செய்யும் உலகின் 4 ஆவது பெரிய நாடாக மாறுவதை தென்கொரியா நோக்கமாக கொண்டு செயல்படுகிற நிலையில் அதன் ஒருபகுதியாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய அளவிலான இராணுவ கண்காட்சியை தென்கொரியா நடத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான இராணுவ கண்காட்சி சியோல் ஏ.டி.எக்ஸ் – 2023 என்ற பெயரில் சியோங்னாம் அருகே உள்ள விமான தளத்தில் நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது.

குறித்த கண்காட்சியானது 22ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கண்காட்சியில் அமெரிக்கா, கனடா, பிரேசில் உள்ளிட்ட 55 நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதோடு 200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் பங்குபற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டுப்போர் பயிற்சியில் அவ்வப்போது ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version