உலகம்

உயிர் பிழைக்க இரவு பகல் போராடுகிறோம்… காஸாவில் ஒரே வீட்டில் சிக்கியுள்ள 90 பேர்

Published

on

உயிர் பிழைக்க இரவு பகல் போராடுகிறோம்… காஸாவில் ஒரே வீட்டில் சிக்கியுள்ள 90 பேர்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக காஸாவில் இருந்து இதுவரை 600,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், பல நூறு குடும்பங்கள் தற்போதும் இஸ்ரேல் தாக்குதளுக்கு பயந்து உயிர் பிழைக்க போராடி வருகின்றனர்.

தெற்கே கான் யூனிஸ் பகுதியை சேர்ந்த பாலஸ்தீன குடும்பம் ஒன்று தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என பெரும்பாலானோரை திரட்டி ஒரே வீட்டில் தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 90 பேர்கள் ஒரே வீட்டில் தங்கியிருப்பதாக கூறும் இப்ராஹிம் என்பவர், தங்கள் குடும்பத்தினர் எவரையும் கைவிட தயாரில்லை என தெரிவித்துள்ளார்.

ஒரு படுக்கையில் இருவர் என ஷிப்ட் முறைப்படி தூங்குவதாகவும், ஆனால் ஒதுக்கப்ப்ட்ட நேரத்தில் கூட தங்களால் தூங்க முடியவில்லை எனவும் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

படுக்கையில் இருந்து எழும் நேரம் முதல் படுக்க செல்லும் நேரம் வரையில், உயிர் தப்ப வேண்டும் என்ற ஒரு மன நிலையில் மட்டுமே இருப்பதாகவும் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மேலும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கூறும் அவர், பதப்படுத்தப்பட்ட டின் உணவு ஏதேனும் விநியோகிக்கப்படுகிறதா என்பதைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் வெளியே செல்ல முயற்சி செய்கிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் தங்களிடம் கோதுமையும் தண்ணீரும் தேவைக்கு இருப்பதாக கூறும் அவர், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு நாளுக்கு ஒருமுறை மட்டுமே உணவருந்தும் நிலை உள்ளது என்கிறார்.

ஆனால் சிறார்கள் நிலை அப்படியல்ல எனவும், 5 வயதுக்கு உட்பட்டவர்கள் 10 பேர் உள்ளனர் எனவும், அவர்களுக்கு எப்போதும் உணவும் குடிநீரும் தேவைப்படுவதாகவும், இயன்ற அளவுக்கு அவர்களின் பசி போக்கி வருவதாகவும், ஆனாலும் மிக மோசமான சூழலை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வயது முதிர்ந்தவர்கள் சூழலுக்கு ஏற்ப உணவை தவிர்த்து விடலாம். ஆனால் பிள்ளைகள் உணவுக்காக அழும் போது அவர்களுக்கு இல்லை என கூற முடியாது எனவும் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, தங்களுடன் கர்ப்பிணி பெண் ஒருவரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரும் இருப்பதாகவும், அவர்களின் நிலை பரிதாப்ம் எனவும் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

எவருக்கேனும் மருத்துவ அவசரம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்லும் சூழல் தற்போது இல்லை எனவும், அதுவே தம்மை மிகவும் வருத்தும் விடயமாக உள்ளது என்றும் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 6ம் திகதி நள்ளிரவு ஹமாஸ் படைகள் கொடூர தாக்குதலை முன்னெடுத்த பின்னர் காஸா பகுதிக்கான உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகிய அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் முடக்கி போர் குற்றம் புரிந்து வருகிறது.

இஸ்ரேல் தொடுத்த பதிலடி தாக்குதலுக்கு பின்னர் குடியிருப்புகளை இழந்த மக்கள் தெருக்களில் தூங்கத் தொடங்கியுள்ளனர். மட்டுமின்றி, உண்வுக்காக வரிசையில் நின்று கையேந்தும் நிலையும் அதிகரித்துள்ளது.

ஆனால் அங்கு மனிதாபிமான நெருக்கடி இல்லை என்று மறுத்துள்ள இஸ்ரேலிய இராணுவம், தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version