உலகம்

சில புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்ற பிரான்ஸ் திட்டம்

Published

on

சில புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்ற பிரான்ஸ் திட்டம்

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருடன் தொடர்பு வைத்துள்ள புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்காக மீளாய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன், செசன்ய புலம்பெயர்ந்தோர் ஒருவர் பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். அவர் அந்த கொடூரச் செயலைச் செய்யும்போது, அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் காசா போரால் உலகம் பரபரப்படைந்துள்ள இந்த நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்சிலிருக்கும் எந்த வெளிநாட்டவர்களுக்கெல்லாம் தீவிரவாதம் தொடர்பான பின்னணி உள்ளது என்று கண்டறிந்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றலாம் என்பது குறித்து மீளாய்வு செய்ய, தனது நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், அந்த ஆசிரியர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஒரு கொலை முயற்சி சம்பவத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞர், ஏற்கனவே தீவிரவாத தொடர்பில் பொலிசாரின் கண்காணிப்பில் இருந்துள்ளார்.

அவரும், கைது செய்யப்படும்போது, அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Exit mobile version