உலகம்

புலம்பெயர்தலை மொத்தமாக குறைக்க அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானிய உள்துறைச் செயலர்

Published

on

புலம்பெயர்தலை மொத்தமாக குறைக்க அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானிய உள்துறைச் செயலர்

பிரித்தானியாவின் முந்தைய உள்துறைச் செயலர் சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்து வந்த நிலையில், தற்போதைய உள்துறைச் செயலரோ, மொத்தமாக புலம்பெயர்தலையே கட்டுப்படுத்த திட்டமிட்டு வருகிறார்.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகிவிட்டது என்பதை பிரதமரே ஒப்புக்கொள்கிறார் என்று கூறியுள்ள பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், மொத்தமாகவே புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக தீவிர திட்டமிடுதலைத் துவக்கியுள்ளார்.

அவ்வகையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் துவங்க உள்ளன.

1. முன்பு, பிரித்தானியாவுக்கு பணி செய்ய வரும் திறன்மிகுப் பணியாளர் ஒருவர் விசா பெறவேண்டுமானால், அவரது வருமானம் குறைந்தபட்சம் 26,200 பவுண்டுகளாவது இருக்கவேண்டும் என்று இருந்தது. தற்போது அந்த தொகையை அதிகரிக்க விரும்புகிறார் சுவெல்லா. அதாவது, அதிக ஊதியம் பெரும் திறன்மிகுப் பணியாளர்களுக்கு மட்டுமே விசா. அப்படியானால், பிரித்தானியாவுக்கு வரும் திறன்மிகுப் பணியாளர்கள் எண்ணிக்கைகூட, குறைந்துவிடும்.

2. திறன்மிகுப் பணியாளர்கள் அல்லாத பிற பணியாளர்களின் உறவினர்கள், பிரித்தானியாவில் செட்டில் ஆவது தடை செய்யப்பட உள்ளது.

3. பிரித்தானியாவில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துவர ஏற்கனவே சுவெல்லா தடை விதித்துவிட்டார்.

4. கல்வி கற்க வந்தவர்கள், கல்வியிலிருந்து பணிக்குத் தாவுவதற்கும் கட்டுப்பாடு விதித்துவிட்டார் சுவெல்லா.

ஆக மொத்தத்தில், பிரித்தானியாவுக்கு இனி சட்டவிரோத புலம்பெயர்வோர் மட்டுமல்ல, திறன்மிகுப் பணியாளர்கள் உட்பட, மொத்தத்தில் புலம்பெயர்வோர் வருவதே கடினம் என்னும் நிலையை உருவாக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார், பிரித்தானிய உள்துறைச் செயலரான புலம்பெயர்தல் பின்னணி கொண்ட சுவெல்லா பிரேவர்மேன்!

Exit mobile version