உலகம்

புது வியூகம் அமைக்கும் ஹமாஸ் இயக்கம்

Published

on

புது வியூகம் அமைக்கும் ஹமாஸ் இயக்கம்

பயங்கரவாத அமைப்பான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு, கடந்த 9 நாட்களாக (அக்டோபர் 7 முதல்) காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரை அறிவித்தது முதல், காஸா பகுதியில் நீர், நிலம் மற்றும் வான்வழியாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ள நிலையில் காசா பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் என்று நெதன்யாகு அறிவித்துள்ளார்.

காசா சிறிய பிரதேசமாக இருந்தாலும், உலகிலேயே அதி நவீன ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கு அதைக் கைப்பற்றுவது அவ்வளவு சுலபமாக இருக்காது.

6 கிலோமீட்டர் அகலமும் சுமார் 45 கிலோமீட்டர் நீளமும் கொண்ட இந்த சிறிய பகுதியில் ஹமாஸ் ஒவ்வொரு அடியிலும் மரணப் பொறியை அமைத்துள்ளதுதாக தெரிவிக்கப்படுகிறது.

காசாவில் 11 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வாழ்வதாகவும், அவர்களில் 30,000 பேர் ஹமாஸ் போராளிகள் எனவும் கூறப்படுகிறது.

மறுபுறம், தனது 300,000 வீரர்களை நிலைநிறுத்தி காசா மீது இறுதித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

இருவருக்குமான இராணுவ எண்ணிக்கையில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் கண்டிப்பாக இஸ்ரேலுக்கு சாதகமாக இருந்தாலும், காசா மீதான இந்த தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் மீது உலகளவில் அழுத்தம் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகிறது.

காசா பகுதி முழுவதும் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பு பரவியுள்ளதோடு, இதில் இஸ்ரேலின் குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க ஹமாஸ் போராளிகள் பதுங்கி உள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் வாகனங்களுடன் காசாவுக்குள் நுழைந்தால், ஹமாஸ் போராளிகள் சுரங்கங்களில் இருந்து தாக்குவதோடு, உள்ளே நுழைந்து அவர்களைத் தாக்குவது பெரிய சவாலாக இருக்குமென கூறப்படுகிறது.

கூடுதலாக, ஹமாஸ் போராளிகள் வெடிமருந்துகள் மற்றும் பிற ஆபத்தான ஆயுதங்களை இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக இரகசியமாகப் பயன்படுத்தக்கூடிய சுரங்கப்பாதை வலையமைப்பில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, காசா பகுதியை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தை செயல்படுத்துவது சுலபமானதாக இருக்காது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காசா பகுதி முழுவதையும் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்து, ஹமாஸ் வலையமைப்பை முற்றிலுமாக அழிக்கும் நடவடிக்கைக்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இராணுவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை சந்தித்து அடுத்த நடவடிக்கைக்கு தயாராகுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளாதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version