உலகம்

ஹமாஸின் தாக்குதல் கொடூரமான அட்டூழியம்! அவர்கள் எதிர்த்து போராட அனைத்தையும் செய்வேன் – சூளுரைத்த இஸ்ரேல் நடிகை

Published

on

ஹமாஸின் தாக்குதல் கொடூரமான அட்டூழியம்! அவர்கள் எதிர்த்து போராட அனைத்தையும் செய்வேன் – சூளுரைத்த இஸ்ரேல் நடிகை

ஹமாஸை எதிர்த்து போராட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

Fauda எனும் வெப் சீரிஸில் நடித்து வருபவர் நடிகை ரோனா லீ ஷிமோன் (40).

இவர் ஹமாஸின் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியானதால் ஆழ்ந்த மனவேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து அவர் பேசும்போது, ‘நாங்கள் ஒரு போருக்கு இடையில் இருக்கிறோம். இது பல உயிர்களுக்கு மேலும் துன்பத்தை விளைவிக்கும், ஆனால் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் தயாராகி வருகிறோம். எங்கள் பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் முதல் முன்னுரிமை’ என்றார்.

அதனைத் தொடர்ந்து நேர்காணலில் சில கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், பூமியில் உள்ள ஒவ்வொரு நாடும் இதில் தலையிட்டு, எங்கள் மக்களை மீட்டு வர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நினைப்பதாக கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘அவர்களிடம் (ஹமாஸ்) 36 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் பணயக் கைதிகளாக இருக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு நட்பு நாட்டின் ஆதரவுக்கு நன்றியுடன் உணர்கிறேன். இஸ்ரேலுக்காக களமிறங்கி போரிட தயாராக இருக்கிறேன். இஸ்ரேலை வெற்றி பெற செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’ என தெரிவித்துள்ளார்.

Exit mobile version