உலகம்
இஸ்ரேல்- ஹமாஸ் மோதலுக்கு எதிராக நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல்- ஹமாஸ் மோதலுக்கு எதிராக நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களின் பின்னணியில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பலஸ்தீனத்தை ஆதரித்து நியூயோர்க்கில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலின் பின்னணியில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தின் போது பலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதாக போராட்டக்காரர்கள் இஸ்ரேலை விமர்சித்துள்ளனர்.
மேலும், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் ஆரம்பம் மட்டுமே என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதற்கும் இங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.
இஸ்ரேலை ஆதரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வரும் பின்னணியில், பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நியூயோர்க் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.