உலகம்

லண்டன் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள்

Published

on

லண்டன் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள்

பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாலஸ்தீன ஆதரவாளர் நேற்று மிகப்பெரிய போராட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இஸ்ரேல் படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் காசா படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலிய ராக்கெட்டுகள் காசா நகரை முழுவதுமாக சிதைத்து வருகிறது.

இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் உருக்குலைந்து கிடக்கும் காசா நகரத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் நேற்று 1 மில்லியன் பாலஸ்தீன மக்களை 24 மணி நேரத்திற்குள் காசாவின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு இடம்பெயருமாறு இஸ்ரேல் அழைப்பு விடுத்தது.

இதன் மூலம் பாலஸ்தீன மக்கள் அதிக அடர்த்தியாக வசிக்கும் வடக்கு காசா நகரத்தில் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் நேற்று மிகப்பெரிய போராட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாலஸ்தீன தேசிய கொடியுடனும், பாலஸ்தீனத்திற்கு ஒற்றுமையை தெரிவிக்கும் விதமாக பாலஸ்தீன் ஆதரவு கோஷங்களுடனும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்த தகவலில், பிரித்தானியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் மற்றும் அதன் கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version